Thursday, April 30, 2020

332. உதய நிலாவெனவே(ப்ரளய பயோதிஜலே-கீதகோவிந்த அஷ்டபதி)

(1)- பைரவி
உதயநிலா..வெனவே சாயிராம் வருவாய் என்சாயி சாயிராம் (2)
கருணை பொழியும்உந்தன் ஹ்ருதய சம்பாஷம் (2)
பேச வா-பர்த்தி சத்ய சரீரா
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(2)- பூபாளி 
  விதியது புவிதனையே சாயிராம் தினம்தினம்அலைக் கழிக்கும் (2)
உலகில் வினைகள்தரும் சங்..கடம்-நீங்க (2)
சாயிராம்-பர்த்தி அன்பு ஸ்வரூபா (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(3)- ஜெய ஜெயந்தி
சலனம்-விசனம்-துயராய் சாயிராம் மனதில்-நடனம் ஆடும் (2)
அதனை-விலக்க மனதில்களி பொங்க (2)
சாயிராம்-பர்த்தி சுந்தர ரூபா (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(4) 3:00- மால்கௌன்ஸ்
சிறுவிரல் அசைவினிலே சாயிராம் தினமற்புதம் செய்திட (2)
கொடுத்து சிவந்த கரத்தைப் புவி கண்டிட (2)
நாடிவா புவி ஈஸ்வரி பாலா (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி 

(5) 3:55- கேதார்
அலைகடல் தலையிடையே சாயிராம் லிங்கோத்..பவம்காட்ட சாயிராம் (2)
சிவவடி.. வானஷி..ரடிபுரிநா..தனே (2)
நாடிவா-புவி த்வாரக வாசா (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(6) 5:06- பத்திபா
ரத்தின கர-திலகா  சாயிராம் ஜகத்தினில் உன்பாதம் சாயிராம்
நடந்திடும் எழில் தனில் உளம்  குளிராகும்  
சாயிராம் அதைக் கண்டிட வேண்டும் 
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(7) 5:46- பிஹகா(?) /பேஹாக்
மதுரத்தின் தீஞ்சுவையே சாயிராம் நின்மதி முகம்காட்டு சாயிராம் (2)
அனுதினம் பாரில் நடந்திடு நீயும்  (2)
சாயிராம்  சத்ய ப்ரேம சரீர (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(8) 6:46- துர்க்கா
முரஹரி சிவன் எனவே சாயிராம் நடனம் தனையாடும் சாயிராம் (2)
ஹரிசிவ ரூபமுன்-திருவடிவாகும் (2)
சாயிராம் சத்வ ஹரிஹர ரூப (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(9)7:34- புரிய தனஸ்ரீ
மாந்தர்கள் கண்டிடவே சாயிராம் அஹஹா எனக்கூற சாயிராம் (2)
தினமதி..சயம்  நீ புரிந்திடுசாயி (2)
நாடி வாபுவி சத்வசித்தீச (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(10)8:28-பிருந்தாவன சாரங்கா
மாசுடை நெஞ்சங்களை சாயிராம் பளிங்கென ஒளிவீச  சாயிராம் (2)
செய்யப்பா..ரிலன்புத் திருவதாரம் (2)
செய்யவாசத்ய ப்ரேம சரீர (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி

(11)- பைரவி
நீயன்றிவே..றிலையே சாயிராம் நிஜமுந்தன் வடிவாகும்  சாயிராம் (2)
ஏழுலகும் உனதுன் உருவாகும் (2)
சாயிராம் உனை எவ்விதம் வேண்ட (2)
அவதரிப்பாய் ஸ்வாமி சாயிராம்.. அவதரிப்பாய் ஸ்வாமி
அவதரிப்பாய் ஸ்வாமி.. அவதரிப்பாய் ஸ்வாமி

This song had been sung by M.S. Subbulaksmi in a ragamala format. Carnatic musicians practice ragas using this song. The ragas for the first eleven verses would be Bhairavi, Bhupali, Jaya Jayanti, Malkauns, Kedar, Patdipa, Bihaga, Durga, Puriya Dhanasri, Vrndavani Saranga, and Bhairavi. The twelfth verse is not sung in this recording.

No comments:

Post a Comment