Thursday, April 30, 2020

335. நான் அழுது (நான் ஒழிந்து நீயாக-ஷண்முகப்ரியா)




நான் அழுது விடும்-கண்ணீர் கண்டிலையா
ஹேசாயி நாதனே என் ஆவி நாதனே
நான் அழுது விடும்-கண்ணீர் கண்டிலையா
என்சாயித் தந்தையே என்று உன்னைக் காணுவேன்
நொந்துவெந்த என்நிலை நீஎன்று காணுவாய்
நான் அழுது விடும்-கண்ணீர் கண்டிலையா
ஆறாக விழியோடும் நீருக்கு அளவேது
மனம் காணும் வட்டத்திற்கு  அளவே இல்லை
அலகில்லா ஆட்டத்தால் அகிலத்தை ஆள்கின்றாய்
என்பாடு மட்டும்-உந்தன் நினைவில் இல்லை
ஸ்வாமி இல்லா வாழ்வு அடிமைக்கு எதற்காக
வந்துவிடு ஸ்வாமீ அவதரித்தே
ஸ்வாமியுன் வரவால்தான் துயரம்விலகும் என்னில் (2)
என் துயரம் விலகும் மண்ணில்
ஸ்வாமியுன் வரவால்தான் துயரம் விலகும் மண்ணில்
வேண்டுகின்றேன் சாயி நாதா வந்திட
நான் அழுது விடும் கண்ணீர் கண்டிலையா
நாமாவளி
ஹே சாயி என் ஸ்வாமி நீ உடனே வந்திடு சாயி
நீ உடனே வந்திடு சாயி
நீயே சத்குரு-தாயுரு அன்புத் தந்தையும்-நண்பனும் ஆயிடு (2)
அன்புத் தந்தையும் நண்பனும் ஆயிடு (2)
ஹே சாயி என் ஸ்வாமி நீ உடனே வந்திடு சாயி
நீ உடனே வந்திடு சாயி (2)
உன்சேவை சத்சங்கத்தை கொண்டு அழைத்தோம் வந்திடுசாயி
கொண்டு அழைத்தோம் வந்திடு சாயி
ஹே சாயி என் ஸ்வாமி நீ உடனே வந்திடு சாயி 
நீ உடனே வந்திடு சாயி (2)


No comments:

Post a Comment