Friday, May 1, 2020

352. தந்தை சாயி(தந்தை யாரோ தாயும் யாரோ)




விருத்தம் 
அத்தனை உலகத்திலும் எள்தினை வடிவத்திலும்
சித்தத்தைக் கடந்தொளிரும் சதானந்த வெள்ளத்திலும்
முக்திசார் யோகத்திலும்  பக்திசார் நாதத்திலும் சாயீசன் தான்
சத்திய சாயி பிரான் திருப்பாதம் போற்றி
( மந்தஸ்மித)
சுத்தசத்வ சதானந்தம் சிவரூப சுபோத்பவம்
மானுஷ வேஷினம் சத்யம் சர்வரோக நிவாரணம்
சஹஜ சௌலப்ய பாவம்  பவப்ராரப்த நிக்ரஹம்
ஸ்ரீசாயீசம் ப்ரணமாமி நிர்மல ப்ரேம ரூபிணே

தந்தை சாயி  தாயும் சாயி
பாரில் சொந்தம் யாவும்
சாயீ சா..யி உருவே
பாரும் என் சாய் யாதும் என் சாய்
(தந்தை சாயி  தாயும் சாயி)
ஞானம் சாயி குருவும் சாயி
வேதம் சாயி போதம் சாயி
ஏழை தன்னை காக்க வந்த
கருணை சாயி உள்ளமே
ஏழை தன்னை காக்க வந்த கருணை சாயி உள்ளமே

உலவிடும்சாயி பேரானந்தம் அனுதினம்சாயி பரமானந்தம் (n)

ஏழை தன்னை காக்க வந்த கருணை சாயி உள்ளமே
துன்பம் தன்னில் இன்பம் சாயி
உலக மாந்தர் வாழ்விலே
நாளும் அழகாய்க் காட்சி தந்த
அன்பின் ரூபம் சாயியே
நாளும் அழகாய்க் காட்சி தந்த அன்பின் ரூபம் சாயியே
நாமாவளி
சத்திய ரூபம் பேரானந்தம் சாயிஸ்வரூபம் பரமானந்தம் (n)
நாளும் அழகாய்க் காட்சி தந்த அன்பின் ரூபம் சாயியே
மண்ணும் சாயி விண்ணும் சாயி
பெண்ணும் சாயி ஆணும் சாயி
உண்மை தன்னின் மேன்மை சாயி
அன்பு வழியும் வடிவே நம் சாய்



No comments:

Post a Comment