Friday, May 1, 2020

373. சாதுக்களா (சாதுலாரா மீறு ரண்டி)



சாதுக்களா வாரிகளா பர்த்..தி-யாத்திரை போவோமா
பக்தர்களா  வாரிகளா சா..யிராமனைப் சேவிப்போமா
(2)
வாங்களைய்யா எல்லோரும் வாங்களைய்யா
சாயி பிரான் அந்தக் கடவுளைய்யா 
ஸ்வா..மிஎன்று எவருமவனைக் கூப்பிடலாங்க (2) 
ஏமி என்று கேட்டுப் பாச மழை-பொழிவாங்க (2) 
வாங்களைய்யா எல்லோரும் வாங்களைய்யா
சாயி பிரான் அந்தக் கடவுளைய்யா 
சக்கரைஎன்றே இனித்திருக்கும் ஸ்வாமியவன் பரிந்து (2) 
அக்கறைகொண்டே அழைத்தொலிக்கும் ஏமிஎனும் தெலுங்கு (2)     
வாங்களைய்யா எல்லோரும் வாங்களைய்யா
சாயி பிரான் அந்தக் கடவுளைய்யா 
என்னைக்கும் இருக்கு வீட்டுப்பொறுப்பு அதுஎன்ன புதுசா (2)
கண்ணுக்கு-எதிரே தெய்வத்தைப் பாக்குற பாக்கியம் லேசா (2)
 வாங்களைய்யா எல்லோரும் வாங்களைய்யா (2)
சாயி பிரான் அந்தக் கடவுளைய்யா 

நாமாவளி
வாங்களைய்யா எல்லோரும் வாங்களைய்யா (2)
வாங்களைய்யா வாங்களைய்யா வாங்களைய்யா  வாங்களைய்யா
சாயிராம சாயிராம சாயிராம சாயிராமா (n)
சாயிராமா





No comments:

Post a Comment