Friday, May 1, 2020

396. என்னமோ செய்கிறதே (நல்லதோர் வீணை செய்தே-பாரதியார்)

என்னமோ செய்கிறதே
என்னமோ செய்கிறதே தினம் நீதந்த தரிசன-நினைப்புவந்தால் (2)
எங்கு நீ என் ஸ்வாமி
எங்கு நீ என் ஸ்வாமி
மண்ணில் என்று-நீ ப்ரேமையில் உதித்திடுவாய் 
என்னமோ செய்கிறதே தினம் நீதந்த தரிசன-நினைப்புவந்தால் 
(MUSIC)
வந்தெமைச்-சேராயோ இந்தப்-பாரினில் தரிசனம் தருவதற்கே (3) 
எங்கு நீ என் ஸ்வாமி….
எங்கு நீ என் ஸ்வாமி
மண்ணைப் பழுதென எண்ணி-நீ பறந்தனையோ
என்னமோ செய்கிறதே தினம் நீதந்த தரிசன-நினைப்புவந்தால் 
(MUSIC)
இசையினில் மெழுகினைப் போல் 
உள்ளம் உருகி-நான் பணிந்திடல் அறியேனே 
 பிசைந்திடும் மனம் நொந்தே
பிசைந்திடும் மனம் நொந்தே
நித்தம் அழுதிடும் திறமன்றிப் பெற்றிலனே
என்னமோ செய்கிறதே தினம் நீதந்த தரிசன-நினைப்புவந்தால்
(MUSIC)
இறைவன்நீ வந்திடினும் சிவ-சக்தியாய் உன்னை-நான் அறிந்திலனே (3)
பிழை-படும் மதி-கொண்டே
பிழை-படும் மதி-கொண்டே
உனை மனிதனாய் நினைத்ததென் பாழ்மனமே 
என்னமோ செய்கிறதே 
என்னமோ செய்கிறதே தினம் நீதந்த தரிசன-நினைப்புவந்தால் (2)
என்னமோ செய்கிறதே 
எங்கு நீ என் ஸ்வாமி 
மண்ணைப் பழுதென எண்ணி நீ பறந்தனையோ
என்னமோ செய்கிறதே தினம் நீதந்த தரிசன-நினைப்புவந்தால்

No comments:

Post a Comment