Saturday, May 2, 2020

426. வரவேணும் வரவேணும் (கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா )



வரவேணும் வரவேணும் ஹே சாயிநாதா 
அலர்கின்ற மலர் போன்ற பாதா 
சதா சிவ-ரூப பவ-நாச ஈசா 
(2)
பர்த்தி நாதா-ஹரே-ஷிரடி வாசா-ஹரே-தீன சம்ரக்ஷகா ப்ரேமதாதா (2)
சம்ரக்ஷகா ப்ரேமதாதா 
காயத்தைச் சதமென்று மாயத்தை நிஜமென்று
சுகமென்று வாழ்வை எண்ணாதே
அதைச் சுகமென்று நீயும் எண்ணாதே
வெறும் தாளென்ற தனம்கொண்டு தானென்ற கனம்கொண்டு
ஞாலத்தில் நீயும் துள்ளாதே
என அறிவூட்ட அன்பூட்டத் தானே
வரவேணும் வரவேணும் ஹேசாயிநாதா 
அலர்கின்ற மலர்போன்ற பாதா 
சதா சிவ-ரூப பவ-நாச ஈசா 
பர்த்தி நாதா-ஹரே-ஷிரடி வாசா-ஹரே-தீன சம்ரக்ஷகா ப்ரேமதாதா
சம்ரக்ஷகா ப்ரேமதாதா

லோஹம் அநித்யமுன் தேஹம் அநித்யம்-நீ
ஆன்மத்தின் சத்ரூபமன்றோ
(2)
என்று அந்நாளில் நீசொன்ன திருவாக்கைப் பார்கேட்க 
வருவாயே நீஇங்கு இப்போ
(2)
வருவாயே நீஇங்கு இப்போ
 (வரவேணும் வரவேணும்..)
காணக் கிடைக்குமா என்று (2)
பெரும் த்யானத்திலாழ்ந்து-உள் சென்று (2)
சற்றும் தளராம..லே-அதனில் நின்று (2)
யோகம் கூடியதில் நிற்கின்ற பாங்கு (2)
தன்னைக் கொண்டிடா பேர்க்குமருள் கொடுக்க வா இனிக்கும்மொழி
 சொல்லவா மனிதஉருக் கொண்டு (2)   
 (வரவேணும் வரவேணும்..)

ஞாலத்தில் மனித உருக்கொண்டு (2)
என்-போல் வீணர்க்கும் அருளமுதம்-தந்து (2)
சாயி கீதத்தில் திருநீறு பொங்கும் (2)
நிகர் இல்லாத உன்-ப்ரேம ரூபம் (2)
தினமும் தடம்-மாறும் மனதில் புகுந்தாட்டும் 
வினை ஓட்ட அவதாரம் கொண்டு (2)
வரவேணும் வரவேணும் ஹேசாயிநாதா 
அலர்கின்ற மலர்போன்ற பாதா 
சதா சிவா-ரூப பவ-நாச ஈசா 
பர்த்தி நாதா-ஹரே-ஷிரடி வாசா-ஹரே-தீன சம்ரக்ஷகா ப்ரேமதாதா
சம்ரக்ஷகா ப்ரேமதாதா
வரவேணும் வரவேணும் ஹேசாயிநாதா (Chorus only)
சாயீசா…




No comments:

Post a Comment