Saturday, May 2, 2020

429. அனாதை யாருமில்லை (அநாதி வேதமும்)


அனாதை-யாருமில்லை ஸ்ரீசாயிநாதனின்-
கடாக்ஷம் கொண்ட பின்னரே
எல்லாரு..மே-சமம் ஸ்ரீசாயி-இதயத்தில் ரெண்டாம் பட்சமுமில்லையே
மாமுனி..வர்-முதல் பூ-மனி..தர்வரை எல்லோரும் அவன்-பிள்ளை
நாமறி..யாக்குறை  பொறுத்திடும்குணத்தினில்  அவனொரு சிறுபிள்ளை

உத்தம நெஞ்சினைப் பற்றி-இழுக்கும் காந்தம் சாயி-பதம்
உன்மத்த-நெஞ்சினை மாற்றி-அமைக்கும் சாந்தம் சா..யி-முகம்

அகர-உகரத்தோ..டிணைந்த-மகர ஓம்-அந்த சாயிநாமம்
நகர-ம..றுத்த முதலையைத்-தள்ள கஜன்-கூப்..பிட்ட-நாமம்

சாயீ சாயி-எனக் கூப்பிடக்-கும்பிட ஈசா என்றே-ஆகும்
சிவாநு..பவத்தை எல்லோர்க்கும்-கொடுக்க ஈஸ்வரன் கொண்ட-ரூபம்

மஹானு பாவர்கள் விடாது தவம்-செய்தும் வராத அருள்-ரூபம்
மஹா-சு..லபமாய் விடாது-தரிசனம் நமக்குக்-கொ..டுத்த-போதும்

படாத பாட்டினைப் பட்டு-மோகத்தில் ஆழ்ந்தது போதாதா
விடாது-பாட்டினில் சதா-நிரந்தர நாமத்தைச் சொல்வோம்-வா

ஹேசாயி ராம்ராம் ஸ்ரீசாயி ராம்ராம் ஜெய்சாயி ராம்ராம்ராம்
ஹரசாயி ராம்ராம் ஹரிசாயி ராம்ராம் ஜெயசாயி ராம்ராம்ராம்




No comments:

Post a Comment