சில்லென்றி..ருக்குதடி சாயிராம் என்றநல் நாமமடி
தித்திருக்குமதே கலியில் முக்திக்கு நல்ல வழி
சில்லென்றி..ருக்குதடி சாயிராம் என்றநல் நாமமடி
பாயும் மனத்தில்-அஹங்..காரமும் சொன்னதும் போகுதடி
ஓயும் உறக்கத்திலும்
அவன்-பேர் ரீங்காரம் செய்யுதடி
எண்ணத்தில் என்னென்னவோ அதனால் மாற்றம்-நி..கழுதடி
என்னத்துக்கோ வாழ்க்கை என்று-நா நாமத்தைப் பழகுதடி
வேதத்தில் உள்ளதெல்லாம் சாயிராம் நாமத்தில் உள்ளதடி
நம்-கண்ணில்
காண்பதெல்லாம்-சாயிராம் அன்றிவே..றொன்றுளதோ
No comments:
Post a Comment