வழிதரும் நாமா அபயக் கரம்-தரும்-நாமா (2)
குருவாக உருவாகி ஒளி தரும்-நாமா (2)
(வழிதரும் நாமா..)
அலைகின்ற மனம்-ஓயும் திரு-நாமம் சொல்லும்போது (2)
பஞ்சாக ஆக்கி-நெஞ்சில் புகுந்திடும் நாமா
மென் பஞ்சாக ஆக்கி நெஞ்சில் புகுந்திடும் நாமா
(வழிதரும் நாமா..)
நம்-பாபம் போம்-சாயி திருநாமம் துணையிருந்தால் (2)
அஹங்காரம் பொடியாகும் திருநாமத்தால்
நம் அஹங்காரம் பொடியாகும் திருநாமத்தால்
நிலையாக நெஞ்சிருந்து அணையாகக் காத்திருந்து
துணையாக நம்-வாழ்வில் இருந்திடும்-நாமா
பெரும் துணையாக நம்-வாழ்வில் இருந்திடும்-நாமா
(வழிதரும் நாமா..)
கோடிப்பணம் சேர்த்து-அதைக் காக்கும்-பயம் தான்-அடைந்தோம்
ஓடிக்-கோடிப்பணம் சேர்த்து-அதைக் காக்கும்-பயம் தானடைந்தோம்
யம-தூதர் வரும்-நாளில்
அது காக்குமா
உரைப்பாயே எந்த-நாளும் ஸ்ரீ-சாயி என்ற-நாமம் (2)
உனைக்காக்கும் துணையாகத் தொடர்ந்திடும் தானாய்
என்றும் உனைக்காக்கும்
துணையாகத் தொடர்ந்திடும் நாமா
(வழிதரும் நாமா..)
நாமாவளி
|
சாயீசன் பேரில் பாவங்கள்போகும் சாயீசன்
பேர்பாடு..
கனிந்துநீ சாயீசன்
பேர் பாடு
அழுதிடக் காண்பதில்லை
சாயிராமன் கண்ணீரை கொடுப்பதில்லை
|
பழுதில்லையே
நாமெல்லாம் அவனைக் கடவுளாய்க் கொள்வதிலே
அவனைக் கடவுளாய்க் கொள்வதிலே
சாயீசன் சத்யசாயீசன் சத்யசாயீசன்பேர்பாடு மனதினில் சாயீசன் பேர்பாடு
சாயீசன் பேரில் பாவங்கள்போகும் சாயீசன்பேர்பாடு..சத்ய
சாயீசன் பேர்பாடு
No comments:
Post a Comment