Sunday, May 3, 2020

451. வேத வேதாந்தமெல்லாம்(நிகம நிகமாந்த-அன்னமைய்யா)


வேத வேதாந்தமெல்லாம் உரைத்திடுமோ உனை முழுக்க சிவசக்தி ரூப சாயி நாராயணா
நாராயணா சாயி நாராயணா (2)
(MUSIC)
உன்-ரூபம் சத்-ரூபம் திவ்ய-சுந்..தர-ரூபம்
நான் கண்டு தரிசிக்கப் பெரும் பாக்யமே
(2)
உன்பாதம் வைகுண்டம் அதை-நானும் தினம்-காண
என்ன-பாக்..கியம்-நானும் செய்தேனய்யா
(2)
என்-பாவ பந்தமெல்லாம் உன்-பார்வை ஒன்றாலே
பொடியாகிப் பறக்காதோ சாயீஸ்வரா
வேத வேதாந்தமெல்லாம் உரைத்திடுமோ உனை முழுக்க சிவசக்தி ரூப சாயி நாராயணா
நான்-பாரில் உதவாத அறியாமை-உருவாக
உணராமல் இருந்தேனே  சாயீஸ்வரா
(2)
நீ பாரில் குருவாக நல்பாதை உருவாக
என் யோகம் ஏதய்யா சாயீஸ்வரா
(2)





No comments:

Post a Comment