Sunday, May 3, 2020

452. செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம் (ராதா மாதவ)



செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம்
(SM)
 செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம்
அதுவே தான்யோக சாதனம்
(2)
செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம்
(MUSIC)
ஞானியர் எல்லாம் உரைத்தார் உணர்ந்தார் 
அனைத்தும் சாயி உன் திருப்பேரே
(2)
இதைத்தான் சொல்லுது நால் வேதம் (2)
சாயி உன் பேரே வைகுண்டம் (2)
செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம்
அதுவே தான்யோக சாதனம்
செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம் 
MUSIC)
அண்டத்தில் இருக்குது அதுவே ஒமாய்
“நானா”ய் இருப்பதும் பேறல்லவா 
(2)
உலகத்துக்..கதுவே மூலா…தாரம் (2)
அதற்க்கில்லையே ஒரு சேதாரம் (2)
செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம்
அதுவே-தான்யோக சாதனம்
செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம் 
(MUSIC)
ஏகம் அதுவென நீயே உரைத்தாய் ஆ..ஆ..

ஏகம் அதுவென நீயே உரைத்தாய்
எதுவும் நானென  நின்றாயே
(2)
ஆனந்தம் அன்றோ உன் திரு ரூபம் (2) 
அதுவன்றோ உன் அருள்  திருநாமம் (2)  

செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம்
அதுவே-தான்யோக சாதனம்
(2)
செய்வேனே சாயி நாம சங்கீர்த்தனம்




No comments:

Post a Comment