சாய்ராம்.. சாய்ராம்..
வில்லுக்குக் கோதண்ட ராமன்
வில்லுக்குக் கோதண்ட ராமன்
நல்ல அன்பென்ற சொல்லுக்கு ஓர்-சாயிநாதன்
(2)
வில்லுக்குக் கோதண்ட ராமன்
(MUSIC)
முதலாக வந்த-பேர் சாய்ராம்
அந்த ஓம்-எனும் ப்ரணவ-ஸ்வ ரூபமே சாய்ராம்
(2)
தனித்தான ப்ரம்மமே சாய்ராம் (2)
கருப் பொருளாக யாவிலும் இருப்பதே சாய்ராம்
வில்லுக்குக் கோதண்ட ராமன்
(MUSIC)
தந்தையாய் வந்ததே சாய்ராம்
ஒரு அன்னையாய் அன்பினைத் தந்ததே சாய்ராம்
(2)
அருள் நீறாகுமே சாய்ராம் (2)
என்ற பேர் சொல்ல ஆறானத் தோற்றமே சாய்ராம்
வில்லுக்குக் கோதண்ட ராமன்
நல்ல அன்பென்ற சொல்லுக்கு ஓர்-சாயிநாதன்
வில்லுக்குக் கோதண்ட ராமன்
(1+SM+1)
(MUSIC)
மண்ணாள வரவில்லை சாய்ராம்
மக்கள் துயர்-தீர்க்க சேவை-தான் செய்யவே வந்தான்
புத்தி-மட்டும் சொல்லவில்லை சாய்ராம் (2)
அவன்தன் வாழ்க்கையே ஒரு-செய்தி என்னும்படி வாழ்ந்தான்
வில்லுக்குக் கோதண்ட ராமன்
(MUSIC)
அவனுக்கென ஓர்-பொருளும் உண்டா
வெறும் பருக்கைதான் தினந்தோறும் உணவாக உண்டான்
உணர்ந்திடாய் எழுந்திடாய் மனிதா (2)
என்றும் சாயிராம் என்று-நீ பாடுவாய் அழகாய்
வில்லுக்குக் கோதண்ட ராமன்
(MUSIC)
அன்புடன் சேவை செய் என்றான்
அதனைச் சொல்லித்தான் செய்துமே காட்டினான் சாய்ராம்
(2)
அன்பென்ற பேர் கொண்டு வருவான் (2)
வந்து முன்போல எல்லோர்க்கும் ஆனந்தம் தருவான்
வில்லுக்குக் கோதண்ட ராமன்
நல்ல அன்பென்ற சொல்லுக்கு ஓர்-சாயிநாதன்
வில்லுக்குக்
கோதண்ட ராமன்
சாய்ராம்..
சாய்ராம் ..
No comments:
Post a Comment