பாடிடுவோம்-சாயி நாமம் சொல்லி (2)
அதில் போகச்-செய்வோம் அந்த பாவம்-தள்ளி + (SM)
கண்களில்-ஊறி அவன்-புகழ்-கூறி அனுதினம்
நாவினில் சாயிராம் என்று
பாடிடுவோம்-சாயி நாமம்-சொல்லி
(MUSIC)
அவனொரு சிவனுரு அறிந்திடுவோம் (2)
அவன் பாரதக்-கண்ணனாய் கீதை-சொன்னான்
கோசல ராமனும் அவன்-உருவே (2)
அவன் தேவ-தேவோத்தம ஆண்டவன் தான்
பாடிடுவோம்-சாயி நாமம்-சொல்லி
(MUSIC)
அன்புத்தந்தை எனவே அவதரித்தான்
அவன் *தந்தையின் தந்தைக்கும் சேவை செய்தான்
**சொன்னால் சிலிர்க்கும் விதங்களிலே
மந்திரன் கொடுமையை அனுபவித்தான்
பாடிடுவோம்-சாயி நாமம்-சொல்லி
(MUSIC)
மண்ணுக்குத் தானே அவதரித்தான் (2)
கண்ணிமை போலதைப் பார்த்துக் கொண்டான்
அனுதினம் தானே சேவை செய்தான் (2)
அவன் பெருமையைச் சொல்லிடல் சாத்தியமோ
பாட்டினில் சொல்லிடல் சாத்தியமோ
பாடிடுவோம்-சாயி நாமம் சொல்லி
அதில் போகச்-செய்வோம் அந்த பாவம்-தள்ளி
கண்களில்-ஊறி அவன்-புகழ்-கூறி அனுதினம்
நாவினில் சாயிராம் என்று
பாடிடுவோம்-சாயி நாமம்-சொல்லி
*தன் தாத்தா கொண்டமருக்குச் சிறு வயதில் தனியாக உணவு சமைத்துப் போட்டு அவரைப் பார்த்துக்
கொண்டான்.
* சிறு வயதில் சத்யாவுக்குப் பேய் பிடித்தது என்று கூறி, மந்திர
வாதியை நாடி சொல்லொணா வலி தரும் கொடிய சிகிச்சையைப் புரிந்தனர்
No comments:
Post a Comment