Sunday, May 3, 2020

462. சொன்னதும் தேனூறும்(சித்திரைத் தேரோடும் மதுரையிலே) **


சொன்னதும் தேனூறும் நாவினிலே அந்த
சாயிராம் நாமம்-தன்னை உருகிச்சொன்னால்
(2)
கேட்டதும் நோய்-போக்கும் மருந்தாகும் நாமமம்மா (2)
வந்திடும் துணையாக கூப்பிட்டு-நீ நாமம் சொன்னால்
வந்திடும் துணையாக கும்பிட்டு-நீ நாமம் சொன்னால்
சொன்னதும் சொன்னதும் தேனூறும் நாவினிலே நாவினிலே
(MUSIC)
நித்தமும் தொந்தரவு தரும் உலகமம்மா (2)
அங்கே பித்தாக்கி மதி-கெடுக்கும் மாயக்கலக்கம் நடக்குமம்மா (2)
சத்தாகித் துணையாகி நமைக்-காக்க சாயிபிரான் (2)
முத்தான திருநாமம் என்ற ஒன்றே போதுமன்றோ (2)
சொன்னதும் சொன்னதும் தேனூறும் நாவினிலே நாவினிலே
(MUSIC)
பாரதப்-போரிலே பாண்டவர்-துணையெனவே
கொண்டதந்த-சாயிகோவிந்தன் திருநாமம் ஒன்றே-அன்றோ
(2)
கடலினில் மிதந்திடவே கல்மேலே எழுதியதும்
அந்த-ராம் எனும்-சாயி ராம-நாம தாரகமே
சொன்னதும் சாயிராம ராம-எனும் தாரகமே 
சொன்னதும் தேனூறும் நாவினிலே அந்த
சாயிராம் நாமம்-தன்னை உருகிச்சொன்னால்
சொன்னதும் சொன்னதும் தேனூறும் நாவினிலே நாவினிலே







No comments:

Post a Comment