Sunday, May 3, 2020

464. உன்னடிகள் நடந்து தரும்(காவடிகள் ஆடி வரும்)



பொன்னடிகள் நடந்து-தரும் தரிசனத்தை சாயி தரிசனத்தை
நாளும் கண்டு-அடிமை ஆனதைய்யா என்மனமே சாயி என்மனமே
(2)
உன் பொன்னடிகள் நடந்து-தரும் தரிசனத்தை ..தரிசனத்தை
(MUSIC)
சாயி-சாயி என்று-உலகம் கும்பிடும் முத்தே
எங்கள் ஆயி-அப்பன் ஆக-வந்த மாபெரும் சொத்தே
(2)
எங்கள் பர்த்தியின் முத்தே
உன்னடிகள் நடந்து-தரும் தரிசனமே
(MUSIC)
தேனாக மனங்களிலே சீரு கொடுப்பாய்
வேறு-தொழில் இல்லை-எனப் பாடவும் வைப்பாய்
(2)
வெள்ளை நிறப் பிள்ளை உள்ள சாயி வள்ளலே  
பிள்ளை உன்னைப் பாடிடவே வார்த்தை இல்லையே
(2)
சாயி வார்த்தை இல்லையே
உன்னடிகள் நடந்து-தரும் தரிசனமே
(MUSIC)
நாள்-தோறும் மக்கள்-வந்து கூடி இருப்பார்
அள்ளித்-தரும் நீறை உடன் பூசிக் களிப்பார்
நாள்-தோறும் மக்கள்-வந்து கூடி இருப்பார்
நீ அள்ளித்-தரும் நீறை உடன் பூசிக் களிப்பார்
சாய்ராம் பூசிக் களிப்பார்
பொன்னடிகள் நடந்து-தரும் தரிசனத்தை சாயி தரிசனத்தை
நாளும் கண்டு-அடிமை ஆனதைய்யா என்மனமே சாயி என்மனமே
உன் பொன்னடிகள் நடந்து-தரும் தரிசனத்தை







No comments:

Post a Comment