Sunday, May 3, 2020

467. தருமம்-நிலை நிறுத்த (குன்று வளர் கந்தன் வரும்)

தருமம்-நிலை நிறுத்த-ஒரு மனிதன்-என அவதரித்து
உலகம்-வந்த சத்ய-சாயி ராமனே
(2)
மனம் பொங்கிவரும் அன்பளித்து மாந்தர்-மனம் புகுந்து-பல
மாற்றங்களைப் புரிந்து நின்றான் பாரிலே
(2)
தருமம்-நிலை நிறுத்த-ஒரு மனிதன்-என  அவதரித்து
உலகம்-வந்த சத்ய-சாயி ராமனே +  (MUSIC)
கோடிப்-பணம் இருந்தும்-மனம் அமைதி அடையல்லே
அதைத் தேடி-அன்பைத் தொலைத்து-நின்றோம் எதுக்குப் புரியல்லே
(2)
வாடி வதங்கும் ஏழைத் துன்பம் போக்கும் செயலிலே (2)
மனச் சாந்தி-சேரும் என்ற சாயி வழியில் கேடில்லே (2)
தருமம்-நிலை நிறுத்த-ஒரு மனிதன்-என  அவதரித்து
உலகம்-வந்த சத்ய-சாயி ராமனே + (MUSIC)
கோடிப் பணம் சேர்ப்பதென்றால் துயரங்கள் தானே
அதைச் சேர்த்த-பிறகும் கூட-நிற்கும் பயம்-ஒன்று தானே
(2)
சாயிராமன் சொன்னதெல்லாம் அன்பொன்று தானே (2)
அதைத் தந்திடவும் கொண்டிடவும் ஆனந்தம் தானே (2)
தருமம்-நிலை நிறுத்த-ஒரு மனிதன்-என அவதரித்து
உலகம்-வந்த சத்ய-சாயி ராமனே +   (MUSIC)
      அன்பே-மொழி சேவை வழி உலகில்-வேறில்லே
நல் பொன்மொழி-என சாயி-சொன்னான் வேதத்தைப் போலே
(2)
தானே-அதன் படி-நடந்தான் அவனுக்கீடில்லே (2)
என்றும் அன்பு-வழியில் நடப்பவர்க்கு கேடு-ஒன்றில்லே (2)
தருமம்-நிலை நிறுத்த-ஒரு மனிதன்-என அவதரித்து
உலகம்-வந்த சத்ய-சாயி ராமனே
மனம் பொங்கிவரும் அன்பளித்து மாந்தர்-மனம் புகுந்து-பல
மாற்றங்களைப் புரிந்து நின்றான் பாரிலே
தருமம்-நிலை நிறுத்த-ஒரு மனிதன்-என அவதரித்து
உலகம்-வந்த சத்ய-சாயி ராமனே

No comments:

Post a Comment