Sunday, May 3, 2020

469. மறுபடி வருவான் சாய்ராம்(முருகனுக்கொரு நாள் திருநாள்) **


மறுபடி வருவான் சாய்ராம் 
அவன் திருவடி தரிசனம் தருவான்
(2) 
மூன்று-மு..றை-அவதரிப்பான் 
எனத் தன்-திரு வாய்-மொழி கொடுத்தான் 
(2)
மறுபடி வருவான் சாய்ராம் 
அவன் திருவடி தரிசனம் தருவான்
(MUSIC)
மெய்யாகி பொய் போக்க வருவான் 
பவ நோய்போக்கும் நம் சாயி பெருமான்
(2)
அன்பே மெய் கொண்ட வடிவாய்

அன்பே மெய் கொண்ட வடிவாய்
நமை மெய்யாய் மாற்றிட வருவான்
(2)
 தந்தை தாயுமென வருவான் 

தந்தை தாயுமென வருவான்
வந்து அன்பை அள்ளி அள்ளித் தருவான்
(2)
மறுபடி வருவான் சாய்ராம் 
அவன் திருவடி தரிசனம் தருவான்
(MUSIC)
அறம் வர மறம் அற வருவான் 
அவன் அருள் திரு நீறினைத் தருவான் 
அன்பே என்றழைத் திடுவான் (2)
நல்லப் பண்பின் அமுதூட்டிடுவான்
எண்ணி வியந்திடும் விதமாய்

எண்ணி வியந்திடும் விதமாய்
தினமாயிரம் அதிசயம் புரிவான்
(2)
மறுபடி வருவான் சாய்ராம் 
அவன் திருவடி தரிசனம் தருவான்
மூன்று-மு..றை-அவதரிப்பான் 
எனத் தன்-திரு வாய்-மொழி கொடுத்தான்  (3) 





No comments:

Post a Comment