Sunday, May 3, 2020

471. சத்தே சித்தே (முத்துக் குமரன் காவியுடுத்தான்)


சத்தே சித்தே சத்தியமே-என் சாயிபிரானே
ஒளிர் முத்தே-மணியே மாணிக்கமே-நீ ப்ரேமையின் ஆறே
மண்ணுலகில் உன்-பதங்கள் திரும்புகின்ற நாளை
நான் எதிர்பார்த்துக் கடத்துகிறேனே யுகமென நாளை
(2)
சத்தே சித்தே சத்தியமே-என் சாயிபிரானே
(MUSIC)
பஜனைகளைப் பாடிடுவார் தினம் காலை மாலை
வேத ஒலியினிடை நீ-நடக்கும் நாளுக்கு நாளை
(2)
கடத்துகின்ற என்-பிறப்பை கண்டிடு தாயே (2)
உந்தன் தரிசனத்தை எதிர்பார்த்தே நடத்துவேன் வாழ்வை (2)
சத்தே சித்தே சத்தியமே-என் சாயிபிரானே
(MUSIC)
ஆண்டவனாம் உனக்கிருக்கு ஆயிரம்-வேலை
அதன் இடையினிலே நீ நினைப்பாய் எனைக்-கண வேளை
(2)
நொந்த எந்தன் சேய்-மனமே தேடுதுன் தாளை (2)
புறக்கணித்து நீ-கிடந்து கடத்தாதே நாளை
என்னைப் புறக்கணித்து நீ-கிடந்து கடத்தாதே நாளை
சத்தே சித்தே சத்தியமே என் சாயிபிரானே
ஒளிர் முத்தே மணியே மாணிக்கமே-நீ ப்ரேமையின் ஆறே
மண்ணுலகில் உன்-பதங்கள் திரும்புகின்ற நாளை
நான் எதிர்பார்த்துக் கடத்துகிறேனே யுகமென நாளை
சத்தே சித்தே சத்தியமே என் சாயிபிரானே




No comments:

Post a Comment