Sunday, May 3, 2020

477. தித்திப்புத்-தித்தித்திருக்க (தித்திக்கும் மூவிரண்டு)

தித்திப்புத்-தித்தித்திருக்க தித்திப்பினைத் தந்ததந்த-
 சாயி-என்ற நாமமல்லவா
(2)
முக்தியின் ஒளி-கொடுக்கும் பக்திக்கு-வ..ழி-வகுக்கும் 
சாயி-திரு நாமம் அல்லவா
(2)
சாயி நாமம்-சொல்ல-வா.. அதை நாளும் சொல்ல-வா 
(2)
(MUSIC)
வெங்க-அவ தூதர்-செய்த மாதவத்தி..லே-கிடைத்த - சொக்கத்தங்க நாமல்லவா
(2)
சத்தியத்தி..லே-உதித்த நித்தியத்தி..லே-இருத்த-
நாம..டைந்த-சொத்து அல்லவா
(2)
   சாயி-நாம ஜபத்திலே மூலப்-பொருள் விளங்கிடும்- 
இது-என்றுமிது திண்ணமல்லவா
(2)
பித்தனென்ற அந்த-சிவன் நம்மிடத்தில் கொண்ட-பித்து- 
சத்தாக வந்ததல்லவா 
(2)
சாயி நாமம் சொல்ல வா.. அதை நாளும் சொல்ல வா 
(2)
தித்திப்புத்-தித்தித்திருக்க தித்திப்பினைத் தந்ததந்த-
 சாயி-என்ற நாமமல்லவா
முக்தியின் ஒளி-கொடுக்கும் பக்திக்கு-வ..ழி-வகுக்கும் சாயி-திரு நாமம் அல்லவா 
(MUSIC)
பர்த்தியில் ப்ரசாந்தி தர புத்தியில்-நல் காந்தி தர அற்புதம் புரிந்ததல்லவா
(2) 
அன்று-அந்த ஷீரடியில் எண்ணையன்று நீரெடுத்து தீப-ஒளி தந்ததல்லவா
(2)
பட்டியலில் இட்டு-அவன் செய்த-பல அற்புதங்கள் 
பாட்டினில்-ப..டித்துச் சொல்லவா
(2)
புத்தியிலுரைத்து-அவன் செய்த-லீலை சொல்ல-வல்ல பக்தர்களைச் சேர்ந்து-கொள்ள வா
(2)
சாயி நாமம் சொல்ல வா.. அதை நாளும் சொல்ல வா (2)
தித்திப்புத்-தித்தித்திருக்க தித்திப்பினைத் தந்ததந்த-
 சாயி-என்ற நாமமல்லவா
முக்தியின் ஒளி-கொடுக்கும் பக்திக்கு-வ..ழி-வகுக்கும் சாயி-திரு நாமம் அல்லவா
சாயி நாமம் சொல்ல வா.. அதை நாளும் சொல்ல வா (2)

No comments:

Post a Comment