Monday, May 4, 2020

483. சோதனை போதாதோ(கோதையின் திருப்பாவை)


பாபா.. பாபா  பாபா.. பாபா +(sm)
சோதனை போதாதோ வேதனை தீராதோ
பேதை-என் சிறுபாட்டில் பிழையோ பாபா (2)
மாதவம் புரியேனோ உன்பதம் நினையேனோ
என்னிடம் வேறென்ன குறையோ அப்பா (2)
சோதனை போதாதோ வேதனை தீராதோ
பேதை-என் சிறுபாட்டில் பிழையோ பாபா + (MUSIC)
வேதமும் அறியாத சாதகம் புரியாத
பாதகன் என்-பேரில் சினமோ பாபா (2)
மார்கழிப் பனிநாளில் அன்பர்கள் பலர்-கூட (2)
கீதம்-நான் இசைக்காத குறையோ பாபா
        கீதத்தை இசைக்காத குறையோ அப்பா 
(MUSIC)      
யாரினி இப்பாரில் ப்ரேமையின் வடிவாக
ஏமிரா பங்காரு என்பார் அய்யா (2)
மேதினி இதன்-மீதில் மூன்று-என் அவதாரம் (2)
என்ற-உன் திருவாக்கு பொய்யா அய்யா (2)
 (MUSIC)
உன்முகம் பூஞ்சோலை நான்-அதில் இளைப்பாற
தினம்-தரி..சனம்- தந்து அருள்வாய் பாபா (2)
சேய்-முகம் பார்த்திடு தாய்-என அணைத்திடு
தந்தையின் வடிவாக வருவாய் அப்பா (2)
 (MUSIC)
ஏழைப்-பங்..காளன்-எனும் பேருக்குச் சீர்-சேர்த்து
ஏழை-என் குரல்-கேட்டு வருவாய் பாபா  (2)
வா-எனப் பாடிடும் பாட்டினைக் கேட்டிட (2)
வந்திடு-பா..பா..நீ-எந்..தன்-முன்..னால்
வந்திடப்பா உந்தன் பிள்ளை முன்னால்
சோதனை போதாதோ வேதனை தீராதோ
பேதை-என் சிறுபாட்டில் பிழையோ பாபா (2)
மாதவம் புரியேனோ உன்பதம் நினையேனோ
என்னிடம் வேறென்ன குறையோ அப்பா (2)




No comments:

Post a Comment