திருநாமம் கொடுக்காதோ-நம் மனதில் நிம்மதி
திருக் கயிலாயம் போல்-விளங்காதோ சாயி-சந்நிதி
(2)
அடடா-என் சொல்வேன்-என்று அமுதா-தீந்..தேனா-என்று
பெரும்-ஞானப்
பெரியோரெல்லாம் சொல்வாரே அவன்-பேர் என்றும்
திருநீறைப் பூசிக்கொண்டு அவன்-புகழைப் பேசிக்கொண்டு
உயர்சேவை கையில்-கொண்டு சொல்வாரே சாய்ராம்-என்று
கஜராஜன் கூவல்-கேட்டு அவன்-சோகம் போக்கச் சென்ற
அருளாகும் அவனின்-நாமம் துணையாகும் என்றும்-காக்கும்
பாஞ்சாலி கேவல்-கேட்டு அவள்-மானம் காக்கப்-போயி
பட்டான ஆடையான திருநாமம் கோவிந்த-சாயி
No comments:
Post a Comment