Monday, May 4, 2020

488. ஈஸ்வரியின் மணிவயிற்றில்(கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்)




ஈஸ்வரியின் மணிவயிற்றில் அன்பே-நல் வடிவு-கொண்டு 
பிறந்ததடி ஓர்-குழந்தை என்-தோழி
அது சாயி-என்ற பெயருடனே மூடிக் கிடந்த மனங்களிலே 
ஊடிப் புகுந்து அன்பளித்தது என்-தோழி
கேளாயோ அடி என்-தோழி அதை-நீ கேளாயோ அடி என்தோழி
(MUSIC)
கோசலைதன் ராமனவன் கோகுலத்தின் கண்ணனவன் 
கொஞ்சம்-கூட ஐயமில்லை என்-தோழி
அவன் கதியில்லையே-என்பவர்க்கும் நானிருக்கேன்என்று-சொல்வான்
யாரவன்-போல் புகல் கொடுப்பார் சொல்-தோழி ?
சொல்-தோழி அடி என் தோழி 
நீயே சொல் தோழி அடி என் தோழி
ஈஸ்வரியின் மணிவயிற்றில் அன்பே-நல் வடிவு-கொண்டு 
பிறந்ததடி ஓர்-குழந்தை என்-தோழி 
(MUSIC)
குழந்தை-சாயி அந்த-சத்ய நாரணனே என்பதனால் 
ஆதிசேஷன் படுக்கை-தந்தான் என் தோழி
சாயி தூங்கும்போது ப்ரணவ ஒலி 
ஓம்..ஓம்..ஓம்.. என்று பண்ணாய்
ஓம்-ஓம் ஓம்-ஓம் ஓம்-ஓம் ஓம்-ஓம் (CHORUS Alone)
சாயி தூங்கும்போது ப்ரணவ ஒலி 
ஓம்..ஓம்..ஓம்.. என்று பண்ணாய்
மூச்சுக் காற்று ஒலித்ததடி என் தோழி
கேளாயோ அடி என் தோழி (2) 
(MUSIC)
எடுபிடியாய் வேலை-செய்தான் அடுப்படியில் சமையல்-செய்தான் 
சிறுவயதில் சேவை-செய்தான் நம்-சா யீ
(2)
அவன் ஆண்டவனாய் இருந்த போதும் மானிடனாய்ப் பிறந்ததனால்
சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம் 
(CHORUS Only) 
அவன் ஆண்டவனாய் இருந்த போதும் மானிடனாய்ப் பிறந்ததனால்
சேவை செய்தே உடல் இளைத்தான் என் தோழி 
சேவைக்கென்றே உடல் எடுத்தான் நம் சாயி
ஈஸ்வரியின் மணிவயிற்றில் அன்பே-நல் வடிவு-கொண்டு 
பிறந்ததடி ஓர்-குழந்தை என்-தோழி
அது சாயி-என்ற பெயருடனே மூடிக்-கிடந்த மனங்களிலே 
ஊடிப்புகுந்து அன்பளிக்குது என் தோழி
கேளாயோ அடி என் தோழி அதை-நீ கேளாயோ அடி என்தோழி





No comments:

Post a Comment