ஓம்.. ஓம்..ஓம்.. ஓம்
உனது போதமே-சாயி நாமசங்கீர்த்தனம்
சாயி கீதமே எனது எளிய-சாதகம்
ஓம்.. ஓம்
உனது போதமே-சாயி நாமசங்கீர்த்தனம்
சாயி கீதமே-எனது எளிய சாதகம்
எனது
பாடலே சாயி ஓர்-நிவேதனம்
புரிந்து
ஏற்கணும் உன் பிள்ளையின் மனம்
உனது போதமே-சாயி நாமசங்கீர்த்தனம்
சாயி கீதமே-எனது எளிய சாதகம்
ஓம்..சாயி-ஓம்
(4)
எனது
நெஞ்சிலே சாயி உன் பதம் தரும்
நாதம்
தோன்றணும் சாயி உன் அருள் கொடும்
பஞ்ச
பூதமும் சாயி விளக்கமாகணும்
பவ-பயம்
எனும் நோய் விலக்கமாகணும்
ஓம்.. ஓம்
உனது போதமே-சாயி நாமசங்கீர்த்தனம்
சாயி கீதமே-எனது எளிய சாதகம்
ஓம்..சாயி-ஓம்
(4)
எனது-நான்
எனும் பந்தம் சென்று-விலகணும்
சர்வ-ஞானமும்
சாயி வந்து-சேரணும்
ராகத்வேஷமும்
சாயி பொய்யின்-வேஷமும்
எனக்கு-விலகணும்
அதற்கு அருளைத் தந்திடும்
ஓம்.. ஓம்
உனது போதமே-சாயி நாமசங்கீர்த்தனம்
சாயி கீதமே-எனது எளிய சாதகம்
ஓம்..சாயி-ஓம் (4)
No comments:
Post a Comment