Monday, May 4, 2020

498. என்றைக்கோ மீண்டும் உன் அவதரிப்பு(மண்ணுக்கும் விண்ணுக்கும் )





என்றைக்கோ மீண்டும்-உன் அவதரிப்பு
மனது-த..விக்குதையா தினம்-கிடந்தது
என்று-உன் தரிசனம் எனும்-விருந்து  
கொள்ளுவோம் அதைச்-சொல்லு நீ-விரைந்து
 (2)
(MUSIC)
உன்-பேச்சில் உருவாகும் தேனே அன்றோ
அது மீண்டும் கேட்கின்ற நாளும் என்றோ
எனப்-பார்த்து மனம்-ஏங்கும் அறிவாய் அன்றோ (2)
நீ-அறிந்தாலும் அறியாப்-பா..சாங்கும் நன்றோ.. 
உனக்கே நன்றோ
என்றைக்கோ மீண்டும்-உன் அவதரிப்பு
மனது-த..விக்குதையா தினம்-கிடந்தது
என்று-உன் தரிசனம் எனும்-விருந்து  
கொள்ளுவோம் அதைச்-சொல்லு நீ-விரைந்து
(MUSIC)
பாரெங்கும் நிறைகின்ற பொருள் நீ அன்றோ சாய்ராம்
பாவத்தின் இடர் நீக்கும் அருள் நீயன்றோ 
மனதுக்குள் இருள் நீக்கும் சுடர் நீயன்றோ (2)
என் பாட்டுக்கு-உருகாயோ வரும்நாள்-என்றோ வரும்நாள் என்றோ
என்றைக்கோ மீண்டும்-உன் அவதரிப்பு
மனது-த..விக்குதையா தினம்-கிடந்தது
என்று-உன் தரிசனம் எனும்-விருந்து  
கொள்ளுவோம் அதைச்-சொல்லு நீ-விரைந்து









No comments:

Post a Comment