ஓர்-கணத்தில் கவர்ந்து-சென்றான் சாயீசன் நடந்து வந்து
எனது-நெஞ்சை தரிசனத்தில் என்-தோ..ழி
(1+SM+1)
அன்றுஅவனிடத்தில் போனநெஞ்சம் அடம்-பிடித்து வரமறுத்து
என்னிடத்தில் திரும்பலையே என் தோழி
(2)
கேளாயோ-அடி என்-தோழி ந்யாயத்தைக் கேளாயோ அடி என்தோழி
(MUSIC)
அன்று-அவன் நடந்து-வந்து ஆயிரமாய் ஜனங்கள்-முன்னால்
கவர்ந்து-சென்றான் என்ன-சொல்வேன் என் தோழி
(2)
அவன் கனிமொழியால் பங்காரு என்று-சொல்லிக் கேட்டதனால்
(1+SM+1)
மயங்கி விட்டேன் தந்து விட்டேன் என் தோழி
ஏன் தோழி அடி என் தோழி
தந்தது ஏன் தோழி அடி என் தோழி
ஓர்-கணத்தில் கவர்ந்து-சென்றான் சாயீசன் நடந்து வந்து
எனது-நெஞ்சை தரிசனத்தில் என்-தோ..ழி
(MUSIC)
குழந்தைபோல குறும்புபேசி மழலைபோல ஏமி-என்றான்
இன்னும்-காதில் ஒலிக்குதடி என் தோழி
(2)
சாயி சிரித்துப் பேசி என்னைப் பார்த்து
துன்னபோத்து என்று சொன்னான்
(1+SM+1)
நானப்போது என்ன-செய்வேன் சொல் தோழி
என்-தோழி நீ சொல் தோழி …
சொல் தோழி அடி என் தோழி
(MUSIC)
தரிசனத்தைக் கொடுக்க-வந்தான் எனது-நெஞ்சை திருடிச் சென்றான்
என்ன-இது ஞாயமடி என் தோழி
(2)
அட-ஒன்றி..ரண்டு இல்லை-கோடி கோடி-ஜனங்கள் பறி-கொடுத்தார்
(1+SM+1)
கள்ளனையும் மிஞ்சி விட்டான் நம் சாயி
அந்தக் கண்ணனையும் மிஞ்சி விட்டான் நம் சாயி
ஓர்-கணத்தில் கவர்ந்து-சென்றான் சாயீசன் நடந்து வந்து
எனது-நெஞ்சை தரிசனத்தில் என்-தோ..ழி
அன்றுஅவனிடத்தில் போனநெஞ்சம் அடம்-பிடித்து வரமறுத்து
என்னிடத்தில் திரும்பவில்லை என் தோழி
கேளாயோ-அடி என்-தோழி இதை-நீ கேளாயோ-அடி என்-தோழி
No comments:
Post a Comment