Monday, May 4, 2020

540. சிறை-கொண்..டென்-உள்ளம்(குறை ஒன்றும்இல்லை) **


சிறை-கொண்..டென்-உள்ளம் நிறைகின்ற-ரூபம்
நினதன்றோ சாயீஸ்வரா… மறை-போற்றும் ஹே-சாயிநாதா
(2)
விண்ணுக்கும்-விண்ணாக நிறையும்-உன்ரூபம்
மண்ணுக்கும் நோகாமல் பூப்-போல நடந்து
சிறை-கொண்..டென்-உள்ளம் நிறைகின்ற ரூபம்
தேடியெனைக் கண்டிட ஓடிவந்தென் உளம்-நிறைந்த
கோடி-யுகத் தவத்தாலும் கிடைக்காத ரூபம்
உன்ரூபம் ப்ரேம-ரூபம் சிவரூபம் சாயிரூபம்
(MUSIC)
சிறியேன்-நான் என்சொல்வேன் பாபா பாபா

சிறியேன்-நான் என்சொல்வேன் பாபா
கண்ணீர் வழிந்தோட உந்தன்-பேர் சொல்லியே வாழ்வேன்
(2)
நெஞ்சாடும் உன்ரூபம் அது-போதும் அய்யா (2)

அன்பே-ஓர் மழையாகி பெய்கின்ற ரூபம்(2)
சிறை-கொண்..டென்-உள்ளம் நிறைகின்ற ரூபம் (2)
உன்ரூபம் ப்ரேம-ரூபம் சிவரூபம் சாயிரூபம்
(MUSIC)
சொல்லிடாத விதம்-நீ சொல்லிலே இதம்-நீ
ஓர்-ப்ரேம ரூபமாய் நிற்கின்றாய் சாயிராம்
(2)
சிறை-கொண்..டென்-உள்ளம்நிறைகின்றரூபம்
காணக் கிடைக்காத எழிலன்றோ  (2)
உன்-ரூபம் ஏழு-பிறவிக்கும் நெஞ்சில் நிறை-ரூபம்
கல்லும் கனிந்திடும் அன்பெனும்-பேர் அதற்கு (2)
நெஞ்சில் ஒளியாக நிறைகின்ற ரூபம் (2)
உன்ரூபம் ப்ரேம-ரூபம் சிவரூபம் சாயிரூபம்
சாயிரூபம் சாயிரூபம் (2)

ப்ரேமபரமாத்மஸ்வரூபசாயிபகவானுக்கி - ஜெய்




No comments:

Post a Comment