Monday, May 4, 2020

555. அருவாய்நின்றும் (பஜகோவிந்தம் - சங்கரர்)

சாயி-சாயி எனும்நாமம்
ஜன்ம சாப விமோசனம்
அவன்-நாமம் மனத்தாலே நினைத்தாலுமே மோக்ஷமே
___________________________________________________________________________________

அருவாய் நின்றும் உருவாய் வந்தும் (2)
ஸாயீசன்-அருள் காக்கிறதே
அருவாய் நின்றும் உருவாய் வந்தும்
ஸாயீசன்-அருள் காக்கிறதே
அவன்-பேரை நீ நினைத்தால் போதும் (2)
வினை-வழிப் பாவங்கள் சென்றே ஓயும் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
மாதவனாகி நல்-கீதையைத் தந்தான் (2)
அதிலே வாழ்க்கை முறையைச் சொன்னான் (2)
கலியினி..லே-அவன் கொண்டான் தோற்றம் (2)
அதுதான் சாயி-பி..ரான்-அவதாரம்
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
அழகாய் தினமும் தரிசனம் தந்தான்
ஆஹா-எனப் பெரும் அற்புதம் செய்தான்
(2)
அன்பால் நம்-மதி சென்றதில் நிறைந்தே (2)
நாம் அறியாமலே மாற்றம்-பு..ரிந்தே (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
நாள்தொறும் ஆயிரம் அற்புதம் செய்யும்
அவன்-திருநீறே மாயம் போக்கும்
(2)
ஓயாதிருந்திடும் பவபயம் எல்லாம்..ஆ...ஆ..
ஓயாதிருந்திடும் பவபயம் எல்லாம்
பொடிப்-பொடியாக்கும் அவன்-அருள் திருத்தாள் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
உலகினில் அரும்பெரும் அன்பினில் சேவையை
ஐயா-புரிந்திட வந்தான் எந்தையாய்
(2)
எங்கும் நிறைந்திடும் பரமம் பாரினில் (2)
சத்ய-சத்ரூபம் கொண்டான் ஒரு தாயென்றே (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
அவனே-அல்லா புத்த-ஜொ..ராஷ்டிரா(2)
த்ரேதா யுகம்-தனில் ராமனுமவன் தான்
அவனே-அல்லா புத்த-ஜொ..ராஷ்டிரா
த்ரேதா யுகம்-தனில் ராமனுமவன் தான்
யதுகுலபால முராரி
யதுகுலபால முராரி அவன்தான் (2)
இனிமேல் தோன்றிடப் போவதும் அவன்-தான் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
உனது-மெய்உருவம்..
உனது-மெய் உருவம் உணர்ந்திட உதவும் (2)
அன்பெனும்-சேவை புரிந்திடல் வேணும் (2) 
எனச்சொன்னானே அறிவு-தந்..தானே (2)
குருவாய்ப்-பாரில் பாதை-தந்தானே (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே

மாயம் போக்கும் சோஹம்-சு..வாசம்
தேஹம் சார்ந்த-அக்..ஞானத்தைப் போக்கும்
(2)
யாரும் ஒன்றென நெஞ்சே சுத்தம் (2)
ஆகும் ஆ..இனி-வேறென்ன வேணும் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே

சத்தியத் தோற்றம் சாத்தியம்-ஆக்கும்
சாயி-ஜபம் நெஞ்சில் தூய்மை-சேர்க்கும்
(2)
பண்பாய் வார்த்தையும் அன்பாய்¬சேவையும் (2)
செய்தால் உடன்-சாய் அருள்வான்-அறிந்திடு (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே

குரு அவனே-எனக் கொண்டு-நாம் போற்றுவோம்
சம்சாரம் எனும்-சாகரம் தாண்டுவோம்
(2)
வேண்டியே-கெஞ்சலோ முகப்-பாராட்டோ (2)
தேவையொன்..றற்ற அவன்-ஒரு தெய்வம் (2)
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே
அருவாய் நின்றும் குருவாய் வந்தும் ஸாயீசன்-அருள் காக்கிறதே

No comments:

Post a Comment