Friday, October 30, 2026

650.எட்ட நின்று | சுட்ட திரு நீறெடுத்து | Folk



 [Pallavi]
எட்ட நின்று பார்த்திருந்த என்னைக் கண்டு புன்னகைத்து
கிட்ட வந்து காட்சி தந்த அண்ணலே 
எட்ட நின்று பார்த்திருந்த என்னைக் கண்டு புன்னகைத்து
கிட்ட வந்து காட்சி தந்த அண்ணலே 
உன்னை விட்டுதூரம் சென்ற பின்னும் என்னிதயம்  இன்னும் கூட 
என்னிடத்தில் மீண்டு வந்து சேரல்லே
உன்னை விட்டுதூரம் சென்ற பின்னும் என்னிதயம்  இன்னும் கூட 
என்னிடத்தில் மீண்டு வந்து சேரல்லே
[Instrumental Break]
[Verse 1]
உந்தன்நிஜம் தன்னில் எந்தன் கல்லிதயம் கொஞ்சம் கூட 
நம்பிக்கையை கொள்ளவில்லை முன்னரே 
உந்தன்நிஜம் தன்னில் எந்தன் கல்லிதயம் கொஞ்சம் கூட 
நம்பிக்கையை கொள்ளவில்லை ஐயனே
உன்னைக் கண்டுவிட்ட மாத்திரத்தில் என்னுடைய நெஞ்சம் தன்னில் 
கொஞ்சம் கூட ஐயமில்லை பின்னரே 
உன்னைக் கண்டுவிட்ட மாத்திரத்தில் என்னுடைய நெஞ்சம் தன்னில் 
ஐயம் கொஞ்சம் கூட  இல்லை ஐயனே 
[Instrumental Break]
[Verse 2]
பக்தரிடை யே நடந்து சின்னப்புன் முறுவல் கொண்டு 
நெஞ்சம் தனை கொள்ளையிட்ட அய்யனே 
பக்தரிடை யே நடந்து சின்னப்புன் முறுவல் கொண்டு 
நெஞ்சம் தனை கொள்ளையிட்ட அய்யனே 
மனம் உன்னிடத்தில் சென்று பின்னர் என்னிடத்தில் கண்டநிலை 
சொல்லிடச்சொல் தேடிப் பித்த னாகினேன் 
மனம் உன்னிடத்தில் சென்ற பின்னர் என்னிடத்தில் கண்டநிலை 
சொல்லிடச்சொல் தேடிஇன்னும் கிட்டல்லே 
[Instrumental Break]
[Verse 3]
உன்னுடைய பேருரைத்து சொல்லினுக்கிசை அமைத்து பாடல்களைச் செய்துதினம் பாடவே ..
சாய்ரா..ம் ..
உன்னுடைய பேருரைத்து சொல்லினுக்கிசை அமைத்து பாடல்களைச் செய்துதினம் பாடவே
அன்று ஆரம்பித்த என்னிதயம் இன்றுவரை பாடல்களை செய்வதைநி றுத்திடத் தான் செய்யலே
அன்று ஆரம்பித்த என்னிதயம் இன்றுவரை பாடல்களை செய்வதைநி றுத்திடத் தான் செய்யலே
[Instrumental Break]  
[Verse 4]


பக்கத்திலே நீ அழைத்து பக்தருக்கு நீறளித்து கைவிரலைச் சுண்டுவதைக் காணவே...
சாய்ரா..ம் ... சாய்ரா..ம்
பக்கத்திலே நீ அழைத்து பக்தருக்கு நீறளித்து கைவிரலைச் சுண்டுவதைக் காணவே 
கண்கள் ஆயிரத்தின் ஆயிரம்நீ  தந்திடினும் எந்தனுக்கு போதாதென்று சொல்லிடவே தோணுமே
கண்கள் ஆயிரத்தின் ஆயிரம்நீ  தந்திடினும் எந்தனுக்கு போதாதென்று சொல்லிடவே தோணுமே
[Instrumental Break]  
[Verse 5]
ஷீரடியில் உந்தன்அருள் கொள்ளவில்லை என்றுஎந்தன் நெஞ்சத்திலே உள்ள குறை போகவே  ..
சாய்ரா..ம் ... சாய்ரா..ம்
ஷீரடியில் உந்தன்அருள் கொள்ளவில்லை என்றுஎந்தன் நெஞ்சத்திலே உள்ள குறை போகவே
இன்று பர்த்தியிலே எந்தனுக்கு இப்பிறவி தன்னில்அருள் காட்சி தந்து மீட்சி தந்த அண்ணலே
இன்று பர்த்தியிலே எந்தனுக்கு இப்பிறவி தன்னில்அருள் காட்சி தந்து மீட்சி தந்த அண்ணலே
[Instrumental Break]  
[Pallavi]
எட்ட நின்று பார்த்திருந்த என்னைக் கண்டு புன்னகைத்து
கிட்ட வந்து காட்சி தந்த அண்ணலே 
உன்னை விட்டுதூரம் சென்ற பின்னும் என்னிதயம்  இன்னும் கூட 
என்னிடத்தில் மீண்டு வந்து சேரல்லே
உன்னை விட்டுதூரம் சென்ற பின்னும் என்னிதயம்  இன்னும் கூட 
என்னிடத்தில் மீண்டு வந்து சேரல்லே


சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்

No comments:

Post a Comment