Wednesday, April 22, 2020

199. அன்னையும் தந்தையும் (அன்னையும் தந்தையும் தானே )



அன்னையும் தந்தையும் சாயி பாரில் (2)
அன்புரு..வாய்நமைக் காத்திடும் தெய்வம்
அன்னையும் தந்தையும் சாயி
சாயிராம் அன்பெனும் ஊற்று (2)
துன்ப மேகத்தை ஒட்டுமோர் பாசத்தின் காற்று
துன்பத்தை ஒட்டுமோர் பாசத்தின் காற்று
மானிடத்தின் உடல்கொண்டு (2)
வந்த தெய்வமே சாயிராம் என்றறி நன்கு
தெய்வமே சாயிராம் என்றறி நன்கு
அன்னையும் தந்தையும் சாயி
( விருத்தம் )
தாயுடன் தந்தையின் ரூபம் கொண்டு புவிநடமாடியே
நாள் தவறாமல்
தரிசனம்-தந்து நம்மைக் காத்தான்
அந்த சாயீசன் மீண்டும் அவதரிப்பானோ
(MUSIC)
தன்னுடல் வாட்டிநம் ஸ்வாமி (2)
செய்த சேவைக்கு ஈடென ஒன்றினைக் காண்பி
சேவைக்கு ஈடென ஒன்றினைக் காண்பி
அன்னை பிதா எங்கள் சாயி (2)
அவன் அன்பெனும் ஆற்றலில் ஆடுது பூமி
அன்பெனும்ஆற்றலில் ஆடுது பூமி
அன்னையும் தந்தையும் சாயி பாரில்
அன்புரு..வாய்நமைக் காத்திடும் தெய்வம்
அன்னையும் தந்தையும் சாயி..தெய்வம்..

மாதபிதா குரு..வானசாயிக்கி - ஜெய்



No comments:

Post a Comment