Thursday, April 23, 2020

303. உன்னிரு விழிமூடி (பன்னிரு விழி யழகை-TMS)



உன்னிரு விழிமூடி பாபா அழகாய்க் கண்வளர்வாய்
உன் களிதரும்-வாய்மொழியை பாபா நாளைக்கு நீ-அருள்வாய்
(2)
(MUSIC)
அன்புக்கு எளிதாக அன்று-யசோதைக் கட்டுக்குப் பணிந்தாயே
தந்தையின் சொல்காக்க அன்றுமுள்படக் காட்டினில் நடந்தாயே
உன்னிரு விழிமூடி பாபா அழகாய்க் கண்வளர்வாய்
(MUSIC)
பொன்னடி வலிக்காதோ பலர்-கண்சனி உன்னைப் பிடிக்காதோ
என் இசையினில்தாலாட்டி உன்திருவடிப் பிடிப்பேன் தூங்காயோ 
உன்னிரு விழிமூடி பாபா அழகாய்க் கண்வளர்வாய்
(MUSIC)
மூச்சினில் அழகாக ஓம்ஓம்எனும் பிரணவத்தை ஒலித்தாயே
கருவியில் தானாக நல்ல இசை வரச்செய்தது நீ தானே
உன்னிரு விழிமூடி பாபா அழகாய்க் கண்வளர்வாய்
உன் களிதரும் வாய்மொழியை பாபா நாளைக்கு நீ அருள்வாய்
ஆராரோ ஆரீரோ ஆராரோ ஆரீரோ       ஆரீரோ..ஆரீரோ..ஆரீரோ...ஆரீரோ 






No comments:

Post a Comment