Friday, May 1, 2020

379. சாயீசன் திருநாமம் சொல்லேன் (தீராத விளையாட்டுப் பிள்ளை)


சாயீசன் திருநாமம் சொல்லேன்
என்றும்துணையாகும் வினைபோக்கும் அதுகாக்கும் பெண்ணே
(3)
சாயீசன் திருநாமம் சொல்லேன்
(MUSIC)
ஒருவாட்டி நீ சொல்லிப் பாரு 

ஒருவாட்டி நீ சொல்லிப் பாரு 
நாமம் வந்தோடி உதவாட்டி எங்கிட்ட கேளு
(2)
ஆளம்பும் பொன் பொருளும் வீணே (3)
உன்னைத் தொடராது உதவாது உயிர்-போன பின்னே
சாயீசன் திருநாமம் சொல்லேன்
(MUSIC)
அழகுள்ள உடல் போகும் பெண்ணே
அதனைச் சதமென எண்ணிப் பெண்ணாசையாலிப்பார் 
முழுதுமுன் கால்தூசு என்பார் 
கண்கள் குருடாகி அறிவினைத் தாழிட்டுரைப்பார்
சாயீசன் திருநாமம் சொல்லேன் 
திருநாமம் சொல்லேன் .. திருநாமம் சொல்லேன்
 (MUSIC)
கன்னலை நீ தின்றிருப்பாய் (2) 
அதன் மேலே தித்திக்குமொர் நாமம்-சொல்லிப்பார்
நாளை யமன்சேனை வருமே

நாளை யமன்சேனை வருமே
அன்று-காக்கும் பயம்போக்கும் சாயீசன் பேரே
(2)
சாயீசன் திருநாமம் சொல்லேன் 
திருநாமம் சொல்லேன் .. திருநாமம் சொல்லேன்
 (MUSIC)
பொல்லாங்கு பழி போக்கும் நாமா 
அதைச் சொல்வோர்க்கு எந்நாளும் ஒருதீங்கு வருமா
(2)
சொல்வோம் அதை தினமும் பெண்ணே (2)
அதைச் சொல்லாமல் என்றைக்கும் நம்வாழ்வு வீணே 
சாயீசன் திருநாமம் சொல்லேன்
என்றும்துணையாகும் வினைபோக்கும் அதுகாக்கும் பெண்ணே
சாயீசன் திருநாமம் சொல்லேன் ..திருநாமம் சொல்லேன் ..திருநாமம் சொல்லேன் 



No comments:

Post a Comment