Wednesday, April 29, 2020

248. ஆதிபரமேஸ்வரனே ( ஆதிபரமேஸ்வரியின் ) ***



ஆதிபரமேஸ்வரனே மண்பிறந்த நம்சாயி (2)
நெஞ்சிலவன்-திருப்பதத்தை துதித்தவன்புகழ்பாடு (2)
ஆதிபரமேஸ்வரனே மண்பிறந்த நம்சாயி
(MUSIC)
நெஞ்சங்களின்-துயரம்கண்டு சாயிராம்-துடித்திடுவான்
தன்கைத்திருநீறுதந்து உடனதைத் துடைத்திடுவான்
(2)
மானிடத்தின் வடிவில்வந்து தெய்வம்சாயி துணைஇருப்பான்
நம்சோகநிலைபோக்க மண்மீதுதிரும்பிடுவான் மண்மீதுதிரும்பிடுவான்
ஆதிபரமேஸ்வரனே மண்பிறந்த நம்சாயி 
(MUSIC)
 அன்புமனம் நாமும்கொண்டு சேவையினைப்புரிந்திடுவோம்
ஆசிகொடுப்பானதனில் சாயீசன்  மனம்களிப்பான்
(2) 
நம்பிக்கையில் எதிர்நோக்கும் ப்ரேமசாயி வடிவம்வரும் 
சாயிராம் திருவடிகள் திரும்பவும் காட்சிதரும் 
ஆதிபரமேஸ்வரனே மண்பிறந்த நம்சாயி 
(MUSIC)
பர்த்தீசன் திருப்பதமே வந்தவர்க்கு புகல்கொடுக்கும்
சத்யசாயி திருநீறைக் கொண்டவர்க்குப்-பலன்கிடைக்கும்
சாயீசன் திருக்கரங்கள் கேட்காமல்-வரம்கொடுக்கும்
பார்புகழும்பர்த்தியிலே எந்நாளும்  அருள்கிடைக்கும்
எந்நாளும் அருள்கிடைக்கும்
ஆதிபரமேஸ்வரனே மண்பிறந்த நம்சாயி
நெஞ்சிலவன்-திருப்பதத்தை துதித்தவன்புகழ்பாடு
ஆதிபரமேஸ்வரனே மண்பிறந்த நம்சாயி..






No comments:

Post a Comment