Wednesday, April 29, 2020

257. மனிதவடிவில் (பாண்டுரங்க மனமோகன-Abhung)


மனிதவடிவிலிந்த உலகினில்வந்த இறைவன் சாயிபிரானே (2)
வந்தஇறைவன் சாயிபிரானே 
மனிதவடிவில்.. மனிதவடிவில்..மனிதவடிவிலிந்த 
உலகினில்வந்த இறைவன் சாயிபிரானே.. 
வந்தஇறைவன் சாயிபிரானே
இரண்டு காதில் தேனாய் பாய பஜனை-சப்தம் மங்களம் சேர்க்க
பேதமின்றி யாவரும்காண துக்கம்போக ஆத..ரிப்பானே
துக்கம்போக ஆத..ரிப்பானே
மனிதவடிவில்..மனிதவடிவில்..மனிதவடிவிலிந்த 
உலகினில்வந்த இறைவன்சாயிபிரானே.. 
வந்தஇறைவன் சாயிபிரானே
கருணைசதா கண்களில்பொங்க சாயிமேனி பொன்னாய்த் துலங்க
இடர்கள்போக்க வேண்டிடும்பக்தர்.. நெஞ்சம்பொங்க 
கண்ணே-என்பானே நெஞ்சம்பொங்க பொன்னே என்பானே 
மனிதவடிவில்..மனிதவடிவில்..மனிதவடிவிலிந்த 
உலகினில்வந்த இறைவன்சாயிபிரானே.. 
வந்தஇறைவன் சாயிபிரானே
ஏழுமலை வேங்கடநாதன் புண்டரீக பண்டரிநாதன்
சேனாபதி முருகனின்-ஈசன் விரூபாஷன் சாயீசன்தானே 
விரூபாஷன் சாயீசன் தானே 
மனிதவடிவில்..மனிதவடிவில்..மனிதவடிவிலிந்த 
உலகினில்வந்த இறைவன்சாயிபிரானே.. 
வந்தஇறைவன் சாயிபிரானே
நாமாவளி 
ஜெய்ஜெய் சாய்ராம் ஜெய்ஸ்ரீ சாய்ராம் (n)
ஷ்யாமசுந்தரா சாயிராமா அன்பையள்ளித்தரும் சாயிமாதா (n)
அன்பையள்ளித்தரும் சாயிமாதா ஷ்யாமசுந்தரா சாயிராமா
ஷ்யாமசுந்தரா சாயிராமா அன்பையள்ளித்தரும் சாயிமாதா
ஜெய்ஜெய் சாய்ராம் ஜெய்ஸ்ரீ சாய்ராம் (n)

சத்ய சாயி பகவானுக்கி – ஜெய்







No comments:

Post a Comment