Thursday, April 30, 2020

285. சாயிராமனின் (பாஹி பாஹி ஸ்ரீ மோகன கிருஷ்ணா)

         
சாயிராமனின் நாமத்தைச் சொன்னால் பரமானந்தமே அம்மா(2)
ராமா சாயிராமா   .. 
(MUSIC) 
நாவினில் அமுதூறச் செய்திடும் அம்மா சத்ய சுந்தரசாயி நாமா (2)
அந்தகன் தூதாய் வந்திடக் காப்பாய் வந்து உதவிடும் நாமா 
ராமா சாயிராமா   .. 
(MUSIC)  
வெங்கவ தூதரும் வேண்டவேஅன்பாய் பூமியில்வந்தஸ்ரீ நாமா(2)
யோகிகள்-ரசிக்க மனம் வரும்தேனாய் ஈடாய்வேறெது அம்மா
ராமா சாயிராமா   ..
(MUSIC)
உன்தனப் பொன்மணிமாளிகையெல்லாம் 
வந்திடுமாஉன் பின்னால்
சஞ்சலம் போய்-மனம் நிர்..மலமாயிடும்- 
சாயிராம் திருப்பேர் சொன்னால் 
ராமா சாயிராமா   ..
(MUSIC) 
அண்ட சரா..சர மண்டலமெல்லாம் தாண்டவமாடிடும் தேனாய் (2)
திக்குகள் சூரியசந்திரன் எல்லாம் நிறைந்திடும்-பேர்அவன் நாமா 
ராமா சாயிராமா   ..

(MUSIC)
சூதுவாது-மதம்-போய்விடும்-தன்னால்-
சத்யசா..யிபேர் சொன்னால் (2)
ஸ்ரீசத்யநாராயணநாமம்நீ சொன்னால் பரமபுண்ணியம் அம்மா (2)
ராமா சாயிராமா   ..
(MUSIC)




No comments:

Post a Comment