561. இமயமுறைச்சிவன்(மஹிஷாசுரமர்த்தினிஸ்லோகம்)
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(2)
(MUSIC)
இமயமுறைச்-சிவன் யமுனைத்-து..றை-நடன்
சேர்ந்தவ..தாரம்-கொண்..டாடியே பேர்
அற்புதங்கள்-பல செய்திடப் பாரினில்
கொண்டது தான்-சாயி ராம்-எனும் பேர்
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
பவ-பய மாயங்கள் தந்திடும் காயங்கள்
ஆற்றிடப் போக்கிட வந்து-இப்பார்
முழுதையும் தன்னிரு கண்ணெனக் காத்திடக்
கொண்ட..திறை-சாயி ராம்-எனும் பேர்
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
அன்புரு..வின்-இறை என்புட..லில்-ஒரு
மானிட..னாய்ப்-புவி வந்ததுவே
கண்பட நேரில்-தெ..ரிந்து-தன் கால்களில்
மண்படப் பாரில் நடந்ததுவே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
உன்னுரு அன்புரு என்னுருவின் கரு
என்று-நம் நெஞ்சில்-க..லந்ததுவே
அற்புதமாய்த்-திரு நீறினில் நம்வினை
தன்னை கணத்தில்-க..ளைந்ததுவே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
உத்தம பக்தர்கள் வேண்டுத..லை-நிறை
செய்திடக் கொண்டு-தன் திருவுளத்தே
அன்பெனும் ஊற்றது பொங்கிடப் பாரினில்
வந்தது தங்கிட முடிவெடுத்தே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
அண்ட சராசரம் தன்னைப் படைத்ததைக்
காத்திடும் மேன்மையைக் கொண்ட இறை
விண்டிடலாகா அற்புதங்கள்- பல
நிகழ்த்திடப் பாரினில் வந்ததுவே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
உன்னத பாரத ஷேத்திரத்..தில்-சிவம்
உதித்திட சங்கல்பம் செய்ததுவே
உதித்தது தோற்றிய அன்பெனும் ராஜ்ஜியம்
அதன்-பெயர் சாயி-மஹாத்மியமே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
அருள்-திரு நீறினில் மாயத்தைப் போக்கி-நம்
மனம்-வரும் நோய்களைத் தீர்த்ததுவே
மெய்-வரு நோய்களை நீக்கிடப் போக்கிட
வைத்திய நாதனு மானதுவே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
பூமி-வறண்டு-நீர் வற்றி-வருந்திடும்
மாந்தரின் துன்பமகன்றிட-ஓர்
மேகம் எனப் பொழிந்தாங்கிடர் போக்கிய
சாயிபிரான் இறையின் உருவே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
உண்டி கொடுத்துயிர் காத்தறி..வின்-பசி
போக்கிய..தன்னத்தின் பூரணியே
கண்பட வந்ததி அற்புதம் செய்தது
சாயி-எனும் ஜகத் காரணியே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
ஜாதி மதங்களைத் தாண்டிடும் சக்தியைத்
தர-இறை வந்தது புவி-மிசையே
கோடி-ஜனங்களைத் தன்மிசை இழுத்திடக்
கொண்டது அன்பெனும் ஓர்-விசையே
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(MUSIC)
ஜெய ஷிரடீச்வர ஜெய சாயீஸ்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-பரமேஸ்வர ஜெய-ப்ரேமேச்வர ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி ஹரே
(2)
ஜெய-ஜெய ஜெய-ஜெய சாயி-ஹரே
ஜெய-ஜெய ஜெய-சத்ய சாயி-ஹரே
No comments:
Post a Comment