Sunday, August 9, 2026

647.நின்னருள் விழி (பன்னிரு விழியழகை)**

நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா 
என் சிறுமதி மொழித்திறமை அதனால் விவரிக்க முடிந்திடுமா
(1+SM+1)
(MUSIC) 
பால் மணம் மாறாமல் நீ காஷா யம்தனைத்  தரித்தாயே
பதின் நான்காம் வயதில்  நீ அருள்தர ஜகத்குரு ஆனாயே  
நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
 (MUSIC)
உன் குரல்  வழியாக நான் இன்னருள் மொழி  பல கேட்டேனே 
என்னிருள் தனைப்-போக்க என் பாட்டினில் வடிக்க முயன்றேனே
நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
(MUSIC)
ஆசைகள் விலகாதோ நின் அருள்மொழி ஒருதரம் கேட்டாலே
பூசை என்பதும் வேறோ யார் அதன்படி வாழ்க்கையில் நடந்தாலே
குரு நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
என் சிறுமதி மொழித்திறமை அதனால் விவரிக்க முடிந்திடுமா
அடடா அடடா அடடா அடடா

Saturday, August 8, 2026

Thiruvadhirai 9-Aug-2026

 9-Aug-2026 4:30 PM

புண்டரீகம்(நாம கோஷம்)

***********************************************************************************

Friday, August 7, 2026

646.அன்பின் மெய்யனே(கொண்டல் வண்ணனை)

அன்பின் மெய்யனே 
மானிடனாய்  மண்ணில் வந்த மாயன் 
(2)
என் உள்ளம் கவர்ந்தோனே (2)
எந்தை போல்
எந்தை போல் எனை அணைத்து (2)
நீ  அன்பினைத் தந்த பின்னே (2)
வேறொன்றினை வேண்டேனே 
உன் அன்பினைக் கொண்ட பின்னே 
வேறொன்றினை வேண்டேனே 
உன் அன்பினைக் கொண்ட பின்னே 
வேறொன்றினை வேண்டேனே 
சாயீ என்ஸாயீ  கேளப்பா பர்த்தீசா  
இதைத்தான்  உரைப்பேன் விடாமே 
உன்னையல்லால் ஒருதாயுமாய் தந்தை ரூபமாய் 
யாரய்யா யாரய்யா கூறய்யா உன்னையல்லால் 
வேறு யாரோ உரை 

Thursday, August 6, 2026

645.இதோ இதம் தரும்-முகம்(சதா சந்தோஷம் தந்திடும்)

645.இதோ இதம் தரும்-முகம்(சதா சந்தோஷம் தந்திடும்)

 சுத்தசத்வ சதானந்தம் சிவரூப சுபோத்பவம் 
மானுஷ வேஷினம்-சாந்தம் சத்யதர்ம சம்ரக்ஷணம் 
சஹஜ சௌலப்ய-பாவம் பவ-ப்ராரப்த நிக்ரஹம்
ஸ்ரீசத்ய சாயி  சத்குரும் பாதபத்மம் ப்ரணமாம்யஹம்

*”சுத்த சத்வ சதானந்த சிவரூபமாக சஹஜ பாவத்துடன் கூடிய  பேரெளிமையைப் பூண்டு சாந்த ஸ்வரூபமாக சத்ய தர்மத்தைக் காக்கவும் மனித குலத்தின் பவபயத்தைப் போக்கும் மார்க்கத்தை உபதேசிக்கவும் மனிதகாயத்தில் அவதரித்த ஸ்ரீ சத்ய சாயி சத்குருவின்பாதகமலங்களைப் பணிந்து நமஸ்கரிக்கிறேன்.”
           ____________________________________________________________________________

இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சாயியின் பதம்
(3)
அன்பைக் காட்டி அணைத்திடும் அவரின் நிலவு நேத்திரம் (2)
அருள்வதில் அவர்மனம்  குறைந்திடாத  பாத்திரம் (2)
இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சாயியின் பதம்
சதா ஜகம் தனில்  உதவி நீயும் செய்திடு 
சதா ஜகம் தனில்  உதவி நீயும் செய்திடு 
அதனிலே பவபயம் போக்கலாம் கண்டிடு
சதா ஜகம் தனில்  உதவி நீயும் செய்திடு 
அதனிலே பவபயம் போக்கலாம் கண்டிடு
என்றருள் மொழியிலே வாழ்க்கைக் கல்வி தந்தது (2)
சத்திய சொற்பதம் அற்புதம் செய்தது (2)
இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சாயியின் பதம்
பரமனே நடந்திடும் அதிசயம் செய்தது
அனுதினம் தரிசனம் தந்து நடந்தது
பரமனே நடந்திடும் அதிசயம் செய்தது
அனுதினம் தரிசனம் தந்து நடந்தது

குறை-சொல் பவரையும் அன்பினில் ஏற்றது (2)
அவரையும் குழந்தையாய் அவர்-மனம் பார்த்தது
எவரையும் குழந்தையாய் தாய்-மனம் பார்த்தது
இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சாயியின் பதம்
சேவையின் மேன்மையை சந்ததம் உரைத்தது   (2)
ப்ரேமையை ஊற்றென பீறிடச் செய்தது
மானிட வடிவிலே தெய்வமே வந்தது (2)
மானிடர் வாழ்க்கையில் நல்வழி தந்தது (2)
 இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சாயியின் பதம்
அன்பைக்காட்டி அணைத்திடும் அவரின்-நிலவு நேத்திரம் (2)
அருள்வதில் அவர்மனம்  குறைந்திடாத  பாத்திரம் (2)
 இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சாயியின் பதம்
அண்ணல் சாயியின் பதம் ..

சாயி நாம சங்கீர்த்தனம் 7

முதல் பக்கம்

Sunday, July 12, 2026

Thiruvadhirai 13-Jul-2026

 13-Jul-2026 4:30 PM

புண்டரீகம்(நாம கோஷம்)

***********************************************************************************

Sunday, June 14, 2026

Thiruvadhirai 16-Jun-2026

 16-Jun-2026 4:30 PM

புண்டரீகம்(நாம கோஷம்)

***********************************************************************************

Wednesday, May 20, 2026

Thiruvadhirai 20-May-2026

 20-May-2026 4:30 PM

புண்டரீகம்(நாம கோஷம்)

***********************************************************************************